என்னை கவர்ந்த இஸ்லாம்

முஹம்மத் அஸத்
போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார்.
லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.வைதீக யூதக் குடும்பத்தில் உதித்த ஓர் இளைஞர் அம்மதக் கோட்பாடுகளை நல்லபடி கற்றுணர்ந்த ஓர் அறிவாளி ஐரோப்பிய நாகரிகத்தில் ஊறிப் போயிருந்த ஒரு மேலை நாட்டவர் முஸ்லிமானதுடன் மட்டுமின்றி இஸ்லாத்தின் சட்ட நுட்பங்களை எடுத்து விளக்கும் மேதை என்று புகழப்படும் அளவுக்கு மாறியது எப்படி? இதைத் தெரிந்துகொள்வது அதுவும் அவர் வாயிலாகவே தெரிந்து கொள்வது நல்லதல்லவா?
பைபிளின் படைய ஏற்பாட்டிலும் தல்மூதிலும் வருணிக்கப்பட்டிருக்கும் "இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மீது மட்டுமே அக்கறை கொள்பவனாக இருக்கிறான்". அப்படியானால் இதர மக்களைப்பற்றி அந்த ஆண்டவனுக்குக் கவலை இல்லையா? இக்கேள்விக்கு வைஸ்ஸின் உள்ளத்தில் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எல்லோரும் யூதர்களாக முடியாது. பிறப்பினால் தான் யூதனாக முடியும். யூதர்களாக முடியாத ஏனைய மக்களின் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ளும் இறைவன் யார்?
ஒரு யூதப் பெண் அல்லது கிறிஸ்துவப் பெண் ஒரு முஸ்லிமை மணந்து, கணவன் வீட்டில் குடித்தனம் நடத்த வருகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் யாரை ஒரு புனிதமான மனிதராக தேவகுமாரனாக மதிக்கிறாளோ, அதே மனிதரை அந்த முஸ்லிமும், அவர் குடும்பத்தினரும் புனிதமானவராகவும் இறைவனின் தூதராகவும் மதிப்பதைக் காண்கிறாள். முந்தய நபிமார்களை முஸ்லிம்கள் அவதூறாகப் பேசுவதை அவள் காணவே முடியாது. மாறாக, ஒரு முஸ்லிம் பெண், ஒரு யூதனின் அல்லது கிறிஸ்துவனின் மனைவியாக குடித்தனம் நடத்தச் சென்றால், இவள் யாரை இறைவனின் இறுதித் தூதரென்று நம்பி மரியாதை செய்கிறாளோ அந்தத் தலைவரை அவள் கணவனும், அவர் வீட்டாரும் இகழ்வதைத்தான் காண்கிறாள்.
அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இந்த இறுதித் தூதரை இழிவாகப் பேசுவதைத் தன்னுடைய காதுகளாலேயே கேட்கவும் நேரிடுகிறது. ஏனேனில் தந்தையின் மார்க்கத்தைத்தானே பிள்ளைகள் பின்பற்றுவது வழக்கம். இம்மாதிரியான அவச்சொல்லுக்கு ஒரு முஸ்லிம் பெண்ணை இலக்காக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
எகிப்தியரின் பதிலைக் கேட்டுவிட்டு கிரேக்கர் வாயடைத்துப் போனார். பதில் சொல்ல முடியவில்லை. இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயமும் உண்டு. இந்த எகிப்தியர் எழுதப் படிக்கத் தெரியாதவர். தமது சமயோசித அறிவின் மூலமே கிரேக்கரின் கேள்விக்குத் தக்க விடை அளித்திருக்கிறார். எப்படியிருப்பினும், இது நல்ல பொருத்தமான பதில்தான் என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குப் பெருமை தேடித்தரவில்லை. இஸ்லாம் தான் முஸ்லிம்களுக்குப் பெருமை தேடித் தந்தது. நபிகள் நாயகமவர்கள் அறிவுறுத்திய உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றி வந்த வரை முஸ்லிம்கள் வெற்றி முனையின் பக்கமே இருந்தார்கள். இதை விடுத்து அவர்கள் அப்பால் செல்லச் செல்ல பேரும் புகழும் அவர்களை விட்டு நகர்ந்துகொண்டே போயின. இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது தெள்ளென விளங்கும்.
என்றிலிருந்து நம்பிக்கை என்பது வெறும் சடங்காகி விட்டதோ, வாழ்க்கைத்திட்டம் என்பது சொல்லளவோடு நின்று விட்டதோ, உளமார உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்பது அறிவிற்கு வேலை கொடுக்காத ஒன்றாகி விட்டதோ, அன்றிலிருந்து முஸ்லிம்களும் ஒரு மாபெரும் சக்தியாகத் திகழத் தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

4 பின்னூட்டங்கள்:

said...

//என்றிலிருந்து நம்பிக்கை என்பது வெறும் சடங்காகி விட்டதோ, வாழ்க்கைத்திட்டம் என்பது சொல்லளவோடு நின்று விட்டதோ, உளமார உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்பது அறிவிற்கு வேலை கொடுக்காத ஒன்றாகி விட்டதோ, அன்றிலிருந்து முஸ்லிம்களும் ஒரு மாபெரும் சக்தியாகத் திகழத் தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com

Mr.dwainsmith0749 i could not able to see your blog. I think something wrong with your blog Can you check.

said...

தொடர்ந்து எழுதுங்கள். தெரிந்து கொள்கிறோம்!

வாழ்த்துக்கள்!

said...

அவதூறுகளை அழிக்க ஒரு சிறந்த முயற்சி உருதியான உள்ளதோடு எழுதுங்கள் அல்லா உங்களுக்கு அருள் புரியட்டும்
அன்புடன்
இறை அடிமை