திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்

முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம். மேலும் மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆன் 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டு, அவர்களுடைய தூதுத்துவ காலத்திலேயே முழுமைப் படுத்தப்பட்டது என்றும் நம்புகிறோம்....மேலும் இந்தக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று வரை மாற்றப்படாமல் இருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமான உண்மையாகும். வரலாற்று ஆய்வாளர்களில் இஸ்லாத்தின் நண்பர்களாகட்டும் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளாகட்டும் அவர்கள் முயற்சி செய்து இது உண்மையானது தானா என்பதை ஆராயட்டும்...!

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்பதற்காண ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) மற்றும் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory)
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உள்ள நம்பிக்கை போல் கடவுள் இருக்கின்றார் என்பதில் மக்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இருப்பதில்லை. ஒரு நவீன இயந்திரம் அல்லது ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவனை விட வேறு யாரேனும் அதைப் பற்றி; அதிகம் தெரிந்திருக்க இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனென்றால் கண்டுபிடித்தவன் அல்லது உருவாக்கியவனுக்குத்தான் அப்பொருளைப் பற்றிய முழு தொழில் நுட்பமும் தெரியும்.மேலும் இந்த உலகம் அல்லது இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பர்: தற்காலத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆரம்பத்தில் புகை மண்டலமாகத்தான் இருந்தது. இதனை முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) என விஞ்ஞானிகள் கூறுவர். பின்பு இது ஒரு பெருவெடிப்புக்கு (Cosmic or Secondary Explosion) உள்ளாகி சூரியனாகவும், நட்சத்திரங்களாகவும், கோளங்களாகவும் மற்றும் நாம் வாழும் பூமியாகவும் பிரிக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இந்த உண்மை 1973-ல் அறியப்பட்டு பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதனைப் பற்றி திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 21, வசனம் 30-ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறது."நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன பின்னர் நாமே அவைகளை பிரித்தமைத்தோம்". எனவே பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றி திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போதாத திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதென்பதற்கு.


கடலில் உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றோடொன்று கலப்பதில்லை
விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரும், நல்ல தண்ணீரும் ஒன்றுக் கொன்று கலப்பதில்லை எனக் கூறுகின்றனர். இந்த சூழ்நிலை உலகின் பல இடங்களிலும் உள்ளது. நைல் நதியின் மெடிட்டாரினியன் கடலில் கலக்கும் வளைகுடா இதற்கு ஒரு உதாரணமாகும். இதில் இந்த இரண்டு வகையான நீரும் கிட்டத்தட்ட 1000கீ.மீ தூரம் வரை இவ்வாறு செல்கிறது. இதனை திருக்குர்ஆன் 25வது அத்தியாயம் 53வது வசனத்தில் இன்னும் அவன் எத்தகையவனென்றால் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான் ஒன்று மிக்க சுவையானதும், தாகம் தீர்க்கக் கூடியது, மற்றொன்று உப்புக் கரிப்பானதும், கசப்பானதுமாகும். இவ்விரண்டிற்கிடையில் திரையையும் மீற முடியாத தடையையும் அவன் ஆக்கியிருக்கிறான். அத்தியாயம் 55 வசனம் 19,20 ல் இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டுவிட்டான். அவை இரண்டுக்கிடையில் தடுப்புண்டு அவ்விரண்டும் அதனை மீறிவிடாது. என்று மேலும் விளக்குகிறான். சில அரபிகள் கடலில் நீந்திச் சென்று இதனை பார்த்து அறிந்திருப்பார்கள் என்று நினைக்க வாய்ப்புள்ளது ஆனால் "கண்ணால் பார்க்க இயலாத திரை" என்று திருக்குர்ஆன் கூறுவதால் இன்று வரை யாராலும் பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.
மழை நீரின் சுழற்சி
பெர்னாட் பால்ஸி என்பவர் தான் முதலில் 1580-ல் நீரின் தொடரான சுழற்சியைப் பற்றிச் சொன்னார்.இந்த நீரின் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் சுழற்சியினுடைய பல நிலைகளைக் குறிப்பிடுகின்றது. பூமியிலிருந்து தண்ணீர் மேலே சென்று, மேகங்களை உருவாக்கி, மேகங்கள் குளிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் மின்னல், இடிகளுடன் மழை பெய்வதை பின்வரும் வசனங்களில் விவரிக்கிறது. அத்தியாயம் 23, வசனம் 18ல் "இன்னும் வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், பூமியில் தேக்கி வைத்தோம். நாம் அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றல் உடையவராவோம்." மேலும், அத்தியாயம் 39 வசனம் 21ல் "நீர் பார்க்கவில்லையா? (அல்லாஹ் தான்) வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான்". அத்தியாயம் 24 வசனம் 43ல் "நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன் பின் ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர்....."
மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 30 வசனம் 43ல் பார்த்தால், "அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவன் காற்றுகளை அனுப்பி வைக்கின்றான் பின்னர் அவை மேகங்களை ஓட்டுகின்றன. பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான். அதனை பல துண்டுகளாகவும் ஆக்கிவிடுகின்றான், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்கிறீர்..." எனக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

7 பின்னூட்டங்கள்:

said...

நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு தேவையான பதிவு

said...

இறைநேசன் நல்ல பதிவு.
//முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம்//

இஸ்லாமுக்கும் புத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் கடவுள் இருக்கிறார் என்று நம்பாதே. மற்றவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. நீ உணர்ந்து தெரிந்து கொள் என்பதே ஆகும்.

அனைவராலும் அனைத்தையும் உணர்ந்து கொள்வதற்கு காலங்கள் பல ஆகும் என்றாலும், கடவுளே ஆனாலும் அவர் சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவர் அல்லர். நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையும் கேள்வி கேட்டவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் குரான் கூறும் கருத்துக்களை அரைகுறையாக மனதில் வாங்கி அப்படியே நம்பாமல், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

said...

தற்கால முஸ்லிம்கள் உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் தனியாகப் பிரித்ததே, முஸ்லிம் விஞ்ஞானிகளின் நவீன பங்களிப்பு குறையக் காரணம்.

ஐரோப்பாவின் இருண்ட காலம் எனப்பட்ட நூற்றாண்டுகள் முஸ்லிம் விஞ்ஞானிகளின் பொற்காலமாக இருந்தது.

இன்றைய விஞ்ஞான உலகிற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கு சான்று இன்றும் வானவியலில் பயன் படுத்தும் வார்த்தைகள் அரபி மற்றும் பார்ஸி மொழியிலிருப்பதே.

இது பற்றிய பதிவையும் இணைத்தால் அழகுக்கு அழகு சேர்த்தது போலாகும். செய்வீர்களா?

said...

Page justify-ஐ நீக்குங்கள். Mozilla Firefox - உலாவியில் பார்க்க இயலாது.

said...

//Page justify-ஐ நீக்குங்கள். Mozilla Firefox - உலாவியில் பார்க்க இயலாது.//

இப்போது சரிசெய்திருக்கிறேன். Mozilla Firefox - உலாவியில் இப்பொழுது தெரிகிறதா என்று பார்த்து சொல்ல முடியுமா?

said...

இறை நேசரே!

நான் Firefox தான் உபயோகிக்கிறேன். இப்பொழுது நன்றாகத் தெரிகிறது..
நன்றி..

கங்கா அவர்களுக்கு ஒரு வார்த்தை.. இஸ்லாமியர்கள் கடவுளை எந்த ஒரு பலவீனமும் தேவையும் இல்லாதவன் என நம்புவதால், தாங்கள் குறிப்பிட்ட சூழல் எழ இஸ்லாமில் வாய்ப்பில்லை

said...

இப்பதிவின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டிருக்கின்றேன் அதனையும் படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

நன்றி