கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார்.

12.05.2005
சகோதரர்களே விழித்திடுங்கள் !!!
இஸ்லாத்தைப்பற்றி மிகவும் அறிந்தவர் போன்று எழுதும் நேசகுமார் அதனுடைய அடிப்படை அறிவு கூட தெரியவில்லை என்பது தான் யதார்த்தம்.
ABCD கூட தெரியாத ஒருவர் ஆங்கிலத்தில் எழுதினால் அல்லது பேசினால் எவ்வாறு இருக்குமொ அவ்வாறுதான் நேசகுமாருடைய எழுத்துக்களும்.
எனக்கு கம்பியூட்டர் பற்றிய அறிவு இல்லை, மேலும் அதைப் படித்தறிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை ஆனால் நான் கம்பியூட்டர் பற்றி நான் உங்களுக்கு பாடம் எடுக்கப் போகிறேன் என்னிடம் வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் என்னை ஒரு கிறுக்கன் அல்லது பைத்தியக்காரன் என்று தானே நினைப்பீர்கள் அதே போன்றுதான், நேசகுமார் ஹதீதுகள் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? எப்படிப்பட்ட ஹதீதுகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது எப்படிப்பட்ட ஹதீதுகளை நிராகரித்து விடலாம் என்ற அடிப்படை அறிவு அறவே இல்லை. உதாரணத்திற்கு 1+1 = 2 Decimal கணக்கின் படி அதே சமயம் 1+1 = 10 Binary கணக்கின் படி, Binary கணக்கு தெரியாதவர்களிடம் சென்று 1+1 = 2 தான் வரவேண்டும் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா? இதே போன்று தான் நேசகுமார் தனக்கு தெரிந்து கொண்டே மறைக்கிறார் அல்லது உண்மையை தெரியாமல் உளறி, மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார். மேலும் ஹதீது சம்பந்தமாக அப்துல்லாஹ்வும், ஸலாஹீத்தீனும் விளக்கம் கொடுத்த பின்னரும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக தொடர்ந்து எழுதித் தள்ளுகிறார் (நிறை குடம் தழும்பாது என்று சொல்வார்கள்.) இது போன்ற அரை குறைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து முதலில் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் அடிப்படைகளை முதலில் படித்துவிட்டு அதன் பின்னர் அதனடிப்படையில் இந்த விவாத களத்திற்கு வந்தால் அது எல்லோருடைய அறிவுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக அமையும்.
நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதராக வாழ்ந்துவிட்டு மக்களுக்கு நற்போதனைகளை எல்லாம் வழங்கிவிட்டு சென்றுள்ளார்கள். அதனை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடைமை. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதே போன்றுதான் இஸ்லாத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர், மாணவர்களிடம் திருடாதே, பொய் சொல்லாதே... என்று நல்லுபதேசங்களை செய்த பின்னரும் அந்த மாணவர்கள் திருடினால் அல்லது பொய் சொன்னால் அதற்கு அந்த ஆசிரியர் செய்ததுதான் குற்றம் என்று நேசகுமார் கூறினாலும் அதில் ஆச்சர்யபடுவதிற்கு ஒன்றுமில்லை.
உதாரணத்திற்கு நேசகுமாருடைய 01.03.05 அன்று எழுதிய பதிவிலிருந்து.
"பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால் ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்... "
பாகிஸ்தானில் ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதென்றால் அதற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீதுகளிலோ எங்கேனும் இவ்வாறு இருந்தால் அதைப்பற்றி குறிப்பிட்டால்தான் அது உங்களுடைய வாதத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும். "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல்" இது போன்ற உதாரணங்களை எழுதுவதை விட்டு விட்டு ஒழுங்கான ஆதாரங்களை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் அடிப்படையில் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

5 பின்னூட்டங்கள்:

said...

ஹதீதுக்களிலிருந்தும், இஸ்லாமிய "அறிஞர்கள்" எழுதியதிலிருந்தும் எடுத்து என்னுடைய பதிவில் நான் பதிந்திருக்கிறேன்.
சமீபத்தில் "உன் மனைவி இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அவளைக் கொல்" என்று "அறிவுரை" வழங்கப்பட்டிருப்பதை மொழி பெயர்த்திருக்கிறேன். அதன் மூலம் எங்கிருக்கிறது என்பதையும் இணைத்திருக்கிறேன்.
மேற்கோள்கள் குரானிலிருந்தும் நபிமொழியிலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான இஸ்லாமின் பதில் என்ன?

1)ஒரு பெண்ணுக்கு சுதந்திரமாக தன் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டா இல்லையா?
2)முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தவன் அல்லது ஒரு முறை இஸ்லாத்தை தழுவியன் வேறொரு மதத்துக்கு போக உரிமை இருக்கிறதா இல்லையா?

**
முஸ்லீம்கள் இஸ்லாத்தை இப்படி பிரச்சாரம் பண்ணுவது மூக்கறுந்தவந், தன்னைப் போல மற்ற எல்லோரையும் மூக்கறுக்க, மூக்கறுந்தவர்களுக்கெல்லாம் சொர்க்கம் தெரியும் என்று பிரச்சாரம் செய்வது மாதிரி. இஸ்லாம் பொய் என்று தெரிந்தாலும், உங்களால் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் சக முஸ்லீம்களால் கொல்லப்படுவீர்கள். இந்தியாவில் முடியாமல் இருக்கலாம். ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் எல்லாம் இதே கதை. சட்டப்பூர்வமாக!

http://ennamopo.blogspot.com

said...

நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதுடைய அரபி மூலத்தை விளங்குவதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அதாவது "மதம் மாறினாலா அல்லது மதத்தினுடைய சட்டத்தை மாற்றினாலா?" என்பதில் சர்ச்சை உள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களில் யாருக்கேனும் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு முதலில் ஆதாரத்தை எடுத்து வைக்கவும்.
அடுத்தது, நீங்கள் ஒரு ஹதீதை ஆதாரமாக கூறவேண்டுமானால் எந்த நூல், யார் அறிவிப்பாளர் என்கிற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். (இது ஒரு பொதுவான செய்தி)

said...

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/019.smt.html#019.4292

Book 019, Number 4292:
Ibn 'Aun reported:
I wrote to Nafi' inquiring from him whether it was necessary to extend (to the disbelievers) an invitation to accept (Islam) before m". ing them in fight. He wrote (in reply) to me that it was necessary in the early days of Islam.
The Messenger of Allah (may peace be upon him) made a raid upon Banu Mustaliq while they were unaware and their cattle were having a drink at the water. He killed those who fought and imprisoned others. On that very day, he captured Juwairiya bint al-Harith. Nafi' said that this tradition was related to him by Abdullah b. Umar who (himself) was among the raiding troops.

இப்ன் அவுன் கூறினார்:
நான் ந·பி அவர்களிடம், கா·பிர்களோடு போரிடும் முன்னர் அவர்களுக்கு இஸ்லாத்தை தழுவும்படி கோரிக்கை வைக்க வேண்டுமா என்று கேட்டு எழுதினேன். அதற்கு பதிலெழுதிய அவர், இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் தேவையாக இருந்தது என்று எழுதினார்.
பானு முஸ்டாலிக் ஜாதியினர்களது ஆடுமாடுகள் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கும் போது, அவர்கள் அறியாவண்ணம் அல்லாவின் தூதர் அவர்கள் மீது போர் தொடுத்து அவர்களில் பெரும்பாலோனோரை கொன்று மீதமிருப்பவரைச் சிறை பிடித்தார். அதே நாளில், அவர் சுவாரையா பிந்த் அல் ஹரித் அவர்களையும் சிறை பிடித்தார். இந்த திடீர் தாக்குதலில் பங்கெடுத்த போர்ப்படையில் வேலை செய்த அப்துல்லா உமர் அவர்களே இதனை தன்னிடம் தெரிவித்ததாக ந·பி கூறினார்.

See the reference to your heart's content.
http://ennamopo.blogspot.com

You do not see this as disgraceful?

said...

நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதுடைய அரபி மூலத்தை விளங்குவதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அதாவது

ஹதீது கலை அறிஞர்களில் ஒரு சாராரின் கருத்து
"ஒருவன் இறைவனுடைய சட்டத்தையே மாற்றி அமைக்கிறான் அவனுக்கு மரணதண்டனைதான் வழங்க வேண்டும்"

ஹதீது கலை அறிஞர்களில் மறு சாராரின் கருத்து
"ஒருவன் இஸ்லாத்தை நல்ல முறையில் அறிந்தபிறகு வேறொரு மதத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படி மீறி சென்றால் அவனுக்கு மரண தண்டனைதான் வழங்க வேண்டும்"
இறைவன் நாடினால் இது சம்பந்தமாக நான் விரைவில் எழுத உள்ளேன். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்காமல் நடுநிலையோடு பார்க்க வேண்டுகிறேன்.

said...

//உதாரணத்திற்கு 1+1 = 2 Decimal கணக்கின் படி அதே சமயம் 1+1 = 10 Binary கணக்கின் படி, Binary கணக்கு தெரியாதவர்களிடம் சென்று 1+1 = 2 தான் வரவேண்டும் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா?//

உதாரணத்திற்கு 1+1 = 2 Decimal கணக்கின் படி, அதே சமயம் 1+1 = 10 Binary கணக்கின் படி, Binary கணக்கு தெரியாதவர்களிடம் சென்று 1+1 = 10 தான் வரவேண்டும் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா?

என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன்