அன்புள்ள ஆரோக்கியம் அவர்களுக்கு

ஒரு விசயத்தை விளங்கிக் கொள்வதில் அவரவர் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்முடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்று நாம் யாருக்கும் நமது கருத்தை திணிக்க முடியாது.
அரபி மொழிதான் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் மூலம், ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இந்த அறிஞர் இந்த கருத்தை சொல்லுகிறார். அந்த அறிஞர் அந்த கருத்தை சொல்லுகிறார் இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் அது போன்ற ஒரு நிகழ்வு நபிகளாரின் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று ஆதாரத்தின் மூலம் நிருபித்துக்காட்டுங்கள். பிறகு அதனைப்பற்றி விவாதிப்போம். குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுதான் உங்கள் ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை எடுத்து வைக்க கூடாது.
ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவது அல்லாஹ் ஒருவனே அகில உலகத்திற்கும் இறைவன். அல்லாஹ் உடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் என்பதுதான். அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கிவைத்தான் அதில் எந்த வித குறைபாடும் இல்லை, மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே முழு இஸ்லாத்தையும் பரிபூரணப்படுத்திவிட்டான். நபிகளாரின் வாழ்வினிலும் எந்தவித குறைபாடும் இல்லை. நபி அல்லாத மற்றனைவரும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருக்கும் உத்திர வாதம் கொடுக்க இயலாது.
எனவே அறிஞர்களின் கூற்றை உங்களுடைய ஆதாரமாக வைக்காமல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் மூலம் உங்கள் ஆதாரத்தை எடுத்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2 பின்னூட்டங்கள்:

said...

உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும்? இஸ்லாமை விட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை என்ற ஷாரியத் சட்டத்திற்கு ஆதாரம் வேண்டுமா?

அப்படிப்பட்ட ஒரு சட்டமே இல்லை என்று சொல்கிறீர்களா அல்லது அப்படிப்பட்ட ஒரு சட்டம் இருந்தால் அது தவறான புரிதலின் அடிப்படையில் உருவானது என்று சொல்கிறீர்களா? உங்கள் நண்பர் அப்துல்லா அந்த சட்டம் சரிதான் என்றும் அதன் அடிப்படை "இஸ்லாமே சரியான மார்க்கம்" ஆகையால் அதிலிருந்து விலகுவது குற்றமானது என்றும் கூறுகிறார். (சிவப்பு விளக்கை தாண்டினால் குற்றமென தண்டிப்பதைப் போல என்று ஒரு "அறிஞர்" விளக்குகிறார்)

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? சொல்லுங்கள் விவாதிக்கலாம்

ஆரோக்கியம்

said...

நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதுடைய அரபி மூலத்தை விளங்குவதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அதாவது

ஹதீது கலை அறிஞர்களில் ஒரு சாராரின் கருத்து
"ஒருவன் இறைவனுடைய சட்டத்தையே மாற்றி அமைக்கிறான் அவனுக்கு மரணதண்டனைதான் வழங்க வேண்டும்"

ஹதீது கலை அறிஞர்களில் மறு சாராரின் கருத்து
"ஒருவன் இஸ்லாத்தை நல்ல முறையில் அறிந்தபிறகு வேறொரு மதத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படி மீறி சென்றால் அவனுக்கு மரண தண்டனைதான் வழங்க வேண்டும்"
இறைவன் நாடினால் இது சம்பந்தமாக நான் விரைவில் எழுத உள்ளேன். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்காமல் நடுநிலையோடு பார்க்க வேண்டுகிறேன்.