பலதார மணம் - 4

பலதார மணத்தைப் பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன (2)

இப்பதிவில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்து மதத்தில் பலதார மணம்

இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை "ஒருவனுக்கு ஒருத்தி" என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)

கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது .

ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட ( கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.

முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி "1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.

1953 ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

2 பின்னூட்டங்கள்:

said...

//ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)//

இதிலும்கூட பார்ப்பணர் தலித் பேதமா? அடப்பாவிகளா?

said...

நமக்குத் தெரிந்த பிரபலமான இந்துக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியை உடையவர்கள் இன்றளவும் இருக்கின்றனர்.

சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் முன்னாள் சட்டமன்றத் தலைவர் காளிமுத்து மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் (தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கணக்கில் சேர்க்கவில்லை).